Friday, March 20, 2026

தடா. ரஹீம் குண்டர் சட்டத்தில் கைது – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கையில்

இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் தடா அப்துல் ரஹீம் அவர்கள் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஏற்கெனவே ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த அப்துல் ரஹீம் நீதிமன்றம் மூலம் பிணைப் பெற்று இன்று சிறையிலிருந்து வெளியே வரும் சூழலில் சென்னை காவல்துறை திடீரென குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்துள்ளது ஏற்றுக்கொள்ள இயலாதது.

அப்துல் ரஹீம் மீது வழக்கு பதியப்பட்டிருந்தால் அதனை சட்ட ரீதியில் எதிர்க்கொள்ளமால் அவரைக் காவல்துறை முடக்க நினைப்பது அப்பட்டமான மனிதஉரிமை மீறல் ஆகும். ஜனநாயக உரிமைகளை நசுக்கும் செயலாகும்.

எனவே, தடா அப்துல் ரஹீம் மீது பதியப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டத்தை உடனே வாபஸ் பெற்று அவரை விடுதலைச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img