Monday, March 23, 2026

மல்லிப்பட்டினம் கடற்கரைக்கு அனுமதியில்லை பேனரால் பரபரப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் கடற்கரையில் வைக்கப்பட்ட பேனர் பலரையும் ஆச்சரியத்தையும்,பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்திலே மீன்பிடி தொழிலில் பிரசிதிப்பெற்ற ஊர் மல்லிப்பட்டினம். அப்படியிருக்கையில் இங்கு துறைமுகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து அதற்கான பணிகள் படுவேகமாக நடந்துவருகின்றன.அந்தவகையில் உள்ளே யாரும் அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு பலகை மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறைமுகம் அமைப்பதால் மீனவ மக்களின் முன்னேறும் என்றே எதிர்ப்பார்த்தனர்.ஆனால் நாளொரு வண்ணம் பொழுதொரு வண்ணமாக துறைமுகம் சார்ந்த அரசின் அதிரடி அறிவிப்பால் மீனவர்கள் திக்குமுக்காடி போய் உள்ளன மீனவர்கள் மற்றும் பொதுமக்கள்.

மல்லிப்பட்டினம் துறைமுகம் கட்டுமானம் பற்றியான பல்வேறு கேள்விகளும் குழப்பங்களும் தொடர்ந்து நீடித்த வண்ணமே இருக்கின்றன.அதற்கான சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டிய அரசோ,அதிகாரிகளோ கொடுத்திடவில்லை.

இந்த திட்டம் மீனவ மக்களை நசுக்க காத்திருக்கும் சாகர் மாலா திட்டத்தின் கீழ் வருமா? இந்த திட்டத்தால் குடியிருப்புகள் காலி செய்யப்படுமா? என்ற கேள்விகளுடன் காத்திருக்கின்றனர்.

அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களும் அந்த மக்களுடன் இணைந்து அவர்களுக்கான குரலை வலுப்படுத்த வேண்டும் என்பது அம்மக்களின் எதிர்ப்பார்ப்பு….

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img