Sunday, March 22, 2026

திமுக செயற்குழு இன்று கூடுகிறது : எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பின் முதலாவதாக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

சென்னை அன்னா அறிவாலயத்தில் இன்று காலை, 10 மணிக்கு நடக்கவுள்ள, இந்தக் கூட்டத்திற்கு செயல் தலைவர், முக.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் என 750 பேர் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக, கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் நிர்வாகிகள் பேசுவர். அடுத்த தலைவராக முக.ஸ்டாலினை பொதுக்குழுவில் தேர்வு செய்து குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

அதிலும் குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரியை கட்சியில் சேர்ப்பதா வேண்டாமா என்பது குறித்தும், அவரால் எழுந்துள்ள சர்ச்சை பற்றியும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

கலைஞரின் மறைவுக்குப் பிறகு திமுகவின் அடுத்த நிலைப்பாடு எப்படியாக இருக்கும் என்பதனை இக் கூட்டம் உறுதிப்படுத்தும் என்று திமுக தொண்டர்கள் நம்புகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img