கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், முதன் முறையாக ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட உள்ளதால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளிப்பது எப்படி என, காப்பாகவாசிகளுக்கு விளக்கப்பட்டது.மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் உள்ள, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், 960 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில், குணம் அடைந்து, இயல்பான நிலையில் உள்ள, 114 ஆண்கள், 78 பெண்கள் என, 192 பேர், புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில், இந்த தேர்தலில், முதல் முறையாக, மனநல காப்பகத்தில், ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட உள்ளது.
இதனால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளிப்பது எப்படி என்பதை, காப்பகவாசிகளுக்கு, தேர்தல் அலுவலர்கள், நேற்றைய முன்தினம் பயிற்சி அளித்தனர்.இது குறித்து, காப்பக இயக்குனர், பூர்ணா சந்திரிகா கூறியதாவது:மனநல காப்பகத்தில் உள்ள, 192 பேர், மத்திய சென்னை தொகுதிக்கு ஓட்டளிக்க உள்ளனர். ஓட்டளிப்பது குறித்த முன்னோட்ட பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறினார்.
More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...





