Friday, March 20, 2026

DIPHTHERIA தடுப்பூசி விவகாரம் : அதிரையில் திடீர் வாட்ஸ்அப் விஞ்ஞானிகளால் பொதுமக்கள் பீதி!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் 40 ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த  (DIPHTHERIA) தொண்டை அடைப்பான்  நோய் தற்போது பரவி வருவதால் அனைத்து பள்ளி மாணவ, மாண விகளுக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.  இதனையடுத்து அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துண்டு பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டது. அதில் இந்த தடுப்பூசி அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டாயம் எனவும் தமிழக அரசு வலியுறுத்திருப்பதாகவும் மேலும், இந்த தடுப்பூசியை மாணவ, மாணவிகளுக்கு போட விரும்பாத பெற்றோர்கள் கட்டாயம் நேரில் வந்து மருத்துவரை சந்திக்கவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுகாதரத்துறை சார்பில் மருத்துவ குழு அதிரையின் பிரபல முக்கிய பள்ளிக் கூடத்திற்கு சம்பவத்தன்று வருகை தந்து தடுப்பூசி போட இருந்த நிலையில்  இச்செய்தியை கேட்ட அதிரையின் திடீர் வாட்ஸ்அப் விஞ்ஞானிகளின் (போலியான) ஆராய்ச்சியால்  வாட்ஸ்அப்பில் போலியான தகவல்கள் கண் இமைக்கும் நேரத்தில்  அனைவருக்கும் பகிரப்பட்டு  மாணவர்களின் நலனுக்கான தடுப்பூசி முகாம் தடுத்து நிறுத்தப்பட்டது.

கடந்த 40 ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த இந்த நோய் தற்போது சென்னை, மதுரை, தஞ்சாவூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 17 வயது வரையிலான குழந்தைகள், சிறுவர்கள் என  பலரை தாக்கி வருகிறது. இதனால் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிரையிலும் இந்நோய் பரவி விடக்கூடாது என்பதற்காக சுகாதரத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடுப்பூசி மூகாம் அதிரையின் சில அவசர குடுக்கைகளாலும், திடீர் வாட்ஸ்அப் போலி விஞ்ஞானிகளாலும் தடுத்து நிறுத்தப்பட்டது தான் வேதனையிலும் வேதனை.

DIPHTHERIA எனும் தொண்டை அடைப்பான் நோய் குறித்த பதிவு விரைவில்.. இணைந்திருங்கள் நம் இணையத்துடிப்போடு..

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img