Saturday, February 7, 2026

CAA,NRC,NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராக குடியரசு தின கிராம சபை கூட்டங்களில் தீர்மான நிறைவேற்றுக ! -அதிரை எக்ஸ்பிரஸ் கோரிக்கை-

spot_imgspot_imgspot_imgspot_img

2020 ஜனவரி மாதம் 26 ஆம் தேதி இந்திய குடியரசு தினம் நாடெங்கிலும் கொண்டாடப்பட உள்ளது.

இந்நாளில் ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்தி முக்கிய தீர்மாணங்கள் எடுக்கப்படுவது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் கட்டமைக்கப்படாத காரணத்தால் சில தீர்மானங்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் முடிக்கப்பட்டு கிராம பஞ்சாயத்து நிர்வாகங்கள் செயல் வடிவம் பெற்று விட்டன.

கிராம பஞ்சாயத்துகள் சார்பில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒப்புதலோடு அதிகாரிகள் முன்னிலையில் நடத்துவது வழக்கம்.

இச்சபையினால் ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்களை உரிய இலாக்காவுக்கு அதிகாரிகள் அனுப்பி வைப்பர்.

அந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கைகள் எடுப்பது என்பது, ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு ஒப்பாக கருதப்படும் அந்தஸ்த்தை பெற்றதாகும்.

இதனால் அங்கு நிறைவேற்றிய தீர்மானங்களில் 80சதவீதம் செயல் முறைக்கு வந்துள்ளன.

எனவே நமதூரை ஒட்டியுள்ள ஏரிபுறக்கரை உள்ளிட்ட கிராம சபை கூட்டங்களில் மக்கள் வெகுவாக கலந்துக்கொண்டு CAA,NRC,NPR போன்ற கொடிய சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற பாடுபட வேண்டும் என அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இதற்காக கிராம பஞ்சாயத்து கவுன்சிலர்கள் முன்னதாகவே இதுகுறித்த திட்டமிடலை வகுத்துகொள்ள வேண்டபடுகிறது.

எனவே ஈழ தமிழர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழின விரோத செயலில் இறங்கியுள்ள இந்த பாசிச பாஜக அரசை எதிர்த்து தீர்மானங்களை நிறைவேற்றி,இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் சண்டாளர்களுக்கு சம்மட்டி அடி கொடுப்போம்.

தாய் தமிழ் உறவாய் … இணைந்து வாழ்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img