Friday, March 20, 2026

சுய ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த நோயாளிகளுக்கு உணவு சமைத்த இஸ்லாமியர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

சீனாவில் பிறந்து உலகெங்கிலும் பரவி மக்களை பாடாய் படுத்தியெடுக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

இந்நூற்றாண்டில் இது மிகப்பெரும் வைரஸ் நோயாக உருவெடுத்து வரும் நிலையில், இந்த வைரஸ் நோயினால் இந்தியாவில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்தார். அதில், (22.03.2020) ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் எனவும், மக்கள் யாரும் வீட்டை வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து நாடு முழுவதும் இந்த சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடித்து வருகின்றனர். இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்படுள்ளது.

இந்நிலையில், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருக்கும் நோயாளிகள் உணவின்றி தவித்துள்ளதை அறிந்த அப்பகுதி இஸ்லாமியர்கள் நோயாளிகளுக்கு உணவு சமைத்து கொடுத்துள்ளது நோயாளிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img