116
நாட்டில் 17 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.
இந்த 17வது மக்களவை தேர்தலில் வாக்களிக்க ஏராளமானோர் வெளியூர்களில் இருந்து தனது சொந்த ஊர்களுக்கு சென்று தனது ஜனநாயகக் கடமையினை நிறைவேற்றினர்.
ஊடக விமர்சன பணிகளுக்கு மத்தியிலும், தங்களது ஜனநாயகக் கடமையினை நமது “அதிரை எக்ஸ்பிரஸ்” நிருபர்களும் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.