
அதிரையில் ARDA அமைப்புக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற மருத்துவமனைக்கான கட்டுமான பணியை அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரும் தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரான முகம்மது சாலிஹ் மேற்கொண்டுவந்தார். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் கிருத்திகாவின் கணவரான ராஜா, கட்டுமான பணியை சட்டவிரோதமாக நிறுத்தியதுடன் ஆபாசமான வார்த்தைகளை பேசி அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் சாலிஹை தாக்க முயன்றார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை கண்டித்து மாற்றத்திற்கான ஊடகவியாளர்கள் மன்றம் தமிழ்நாடு காவல்துறை மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து ட்வீட் செய்துள்ளது. அதில் அதிராம்பட்டினத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர் முஹம்மது சாலிஹை தகாதவார்த்தையில் திட்டி, தாக்க முயன்ற நகராட்சி திமுக கவுன்சிலர் கிருத்திகாவின் கணவர் ராஜாவை வன்மையாக கண்டிக்கிறோம். காவல்துறையில் அளித்துள்ள புகார் மீது @tnpoliceoffl உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
CC: @mkstalin என குறிப்பிடப்பட்டுள்ளது.