தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் செயல்பட கூடிய அரசு மருத்துவமனையை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு இரவுநேர மருத்துவர்கள் பணியில் இல்லாததால் அவசர தேவைக்கு 24மணிநேரம் இயங்க கூடிய ஷிஃபா மருத்துவமனையை பொதுமக்கள் அணுகுகின்றனர். இந்நிலையில், பகல்நேரத்திலும் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக படுக்கை வசதியில்லாமல் நடைபாதைகளில் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சுகாதாரமற்ற முறையில் வைத்தியம் பார்க்கப்படுகிறது. இவ்வாறான மக்கள் பிரச்சனைகளை உள்ளூர் அரசியல் புள்ளிகள் கண்டுக்கொள்ளாமல் பட்டா நிலத்தில் மக்களின் நலனுக்காக கட்டப்படும் மருத்துவமனை பணியை குண்டர் படையுடன் தடுத்தி நிறுத்தியது அதிரை மக்களை முகம் சுளிக்க செய்திருப்பதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இது உத்தரபிரதேசம் அல்ல! அதிராம்பட்டினம்!! அரசு மருத்துவமனையில் ஏழைகள் படும்பாடு!
1.3K
previous post