Home » சர்வாதிகாரம் ஒழிந்து சமத்துவம் மேம்பட இந்நாளில் உறுதியேற்போம் !

சர்வாதிகாரம் ஒழிந்து சமத்துவம் மேம்பட இந்நாளில் உறுதியேற்போம் !

by Admin
0 comment

ஹஜ்ஜுபெருநாள் வாழ்த்து செய்தியில் அதிரை நகர தலைவர் சூளுரை !

தியாகத்தின் பெருமையை உணர்த்தும் தியாகத்திருநாளில் சமய நல்லிணக்கம் பேணிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகரத் தலைவர் வழக்கறிஞர் முனாஃப் தெரிவித்து இருக்கிறார்.

இப்ராஹிம் நபியின் தியாத்தை உணர்த்தும் உன்னத நோக்கில் கொண்டாப்படும் இந்த ஹஜ் பெருநாள் உலக முஸ்லீம்களின் உன்னத திருநாளாகும்.

இறைவனின் கட்டளையை நிறைவேற்ற துணிந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தையும் இறை கட்டளையை நிறைவேற்ற துணை நின்ற அருமை மகனார் இஸ்மாயிலையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அன்னாரின் வழித்தோன்றல்ளான நாம் சமூகம் சமய நல்லிணக்கம், சகிப்புத்தன்மை இவைகளை கடைபிடித்து நாட்டை பீடித்துள்ள சர்வாதிகாரம் அகல் இந்நாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும் என தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்து இருக்கிறார்.

இயன்றவரை இல்லாதவர்களை இனம்கண்டு அவர்களுக்கு தேவையாக உதவிகளை.செய்திட வேண்டும் என கட்சியினரை கேட்டு கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter