மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் காய்கறி கடை முகமது ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மருமகனும் M. அப்துல் ரஜாக், மர்ஹும் M. ஷேக் தாவுது, M. ஜமால் முஹம்மது இவர்களின் சகோதரரும் A. செய்யது அரபு அவர்களின் மாமனாரும், S.அகமது அஸ்ரப் அவர்களின் அப்பாவுமாகிய M. முகமது பாசிம் அவர்கள் இன்று காலை மேலத்தெரு இல்லத்தில் காலமாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் ஜும்மா தொழுகையுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.
இறைவா! (அன்னாரை).
மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை (கப்ரை) விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக!
தகவல் :- TIYA