நாளுக்கு நாள் இரத்த தேவைகள் அதிகமாக தேவை படுவதால், இரத்த பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக.
அதிராம்பட்டினம் கிரசண்ட் பிளட் டோனர்ஸ்(CBD) அமைப்பின் இரத்த தான கொடையாளர்கள் சேர்க்கை முகாம் இன்று அதிராம்பட்டினம் பெரிய ஜுமுஆ பள்ளிவாசலில் ஜுமுஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. இந்த இரத்த தான கொடையாளர் சேர்க்கை முகாமில் பொதுமக்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் தங்களின் தகவல்களை பதிவு செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் CBD அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் பேரா. செய்யது அகமது கபீர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் H. இம்தியாஸ், அதிரை நகர தலைவர் அப்துல் மாலிக், நகர துணை தலைவர் நூர் முகமது, நகர செயலாளர் அலெக்ஸ்சாண்டர், நகர துணை செயலாளர் ரிபாஸ் அகமது மற்றும் நகர நிர்வாக குழு உறுப்பினர்கள் அதிரை ஹசன், ஃபாய்ஸ் அகமது, பர்ஹான், ராஜிக் அகமது ஆகியோர் கலந்துகொண்டனர்.





