Monday, December 1, 2025

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கவனத்திற்கு!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத அதிகனமழை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இடைவிடாமல் பெய்யும் கனமழையாலும், அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீராலும் நான்கு மாவட்டங்களும் வெள்ள நீரில் மிதக்கின்றன. அங்கு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்கள், சமூக அமைப்புகள் என பலரும் தங்களால் இயன்ற மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி தமிழ்நாடு அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், தேவையான உதவிகளை பெற வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்விட்டர், முகநூல் போன்ற தளங்களிலும் பொதுமக்கள் உதவிகள் கேக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📱வாட்ஸ்அப் எண்: 81485 39914
✖️ட்விட்டர் (X): @tn_rescuerelief மற்றும் @tnsdma
💻பேஸ்புக்: @tnsdma

இதுதவிர நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மீட்புப்பணிகள், அவசர உதவி, ஆம்புலன்ஸ் தேவைக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள இகக்கங்களின் தொலைபேசி எண்கள் கீழே போஸ்டர்களாக கொடுக்கப்பட்டுள்ளது. தேவையுடையவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img