Wednesday, March 18, 2026

முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் ஒதுக்கீடு! மீண்டும் களமிறங்குகிறார் நவாஸ் கனி!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து ‘INDIA’ கூட்டணியை அமைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் INDIA கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்கிறது. இக்கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மமக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுடன் திமுகவின் தொகுதி பங்கீட்டுக் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அந்த வகையில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான INDIA கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேரா. காதர் மொய்தீனும் கையெழுத்திட்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காதர் மொய்தீன், திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அங்கு தற்போதைய எம்பி-யாக உள்ள நவாஸ் கனியே மீண்டும் வேட்பாளராக ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img