Saturday, May 4, 2024

அதிரையில் போதைக்கு எதிராக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய SMI!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாணவர் பிரிவான சமூகநீதி மாணவர் இயக்கம்(SMI) அதிரை நகரம் சார்பாக அதிரை காதிர் முகைதீன் கல்லூரி அருகாமையில் மாபெரும் போதைக்கு எதிரான கையெழுத்து விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது.

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி அருகே இன்று 04/03/2024 மதியம் 2 மணியளவில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமிற்கு, சமூகநீதி மாணவர் இயக்கத்தின்(SMI) மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் தலைமையேற்று வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் முருகேசன் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து போதை பொருட்களின் தீங்குகள் பற்றி உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து தமுமுக மாவட்ட பொறுப்புக்குழு தலைவரும் மமக 24 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக் உரையாற்றினார்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், அதிராம்பட்டினம் நகர நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். இறுதியாக சமூகநீதி மாணவர் இயக்கத்தின் காதிர் முகைதீன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் சாஜித் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை அதிரை நகர சமூகநீதி மாணவர்(SMI) இயக்கத்தின் பொறுப்பாளர் சித்திக் சிறப்பாக ஏற்பாடு செய்தார். மேலும் விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிராக தங்களுடைய கையெழுத்துக்களை பதிவு செய்தனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...