Saturday, May 4, 2024

செங்கற்கள் நடுவே குப்பை கூண்டு : துப்புரவு பணியாளர்களுக்கு Cmp லைனில் இடையூறு!!

Share post:

Date:

- Advertisement -
அதிரையில் தினந்தோறும் இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் அதிரை பேரூராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்கள் ஊரில் இருக்கும் குப்பைக் கூளங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்றுயை தினம் வழக்கம் போல தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த துப்பரவு பணியாளர்கள் Cmp லைனில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஹனீஃப் பள்ளிக்கு அருகாமையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக வைக்கப்பட்டிருக்கும் குப்பை கூண்டு அருகில் இரு புறமும் செங்கற்களை சம்பந்தப்பட்ட யாரோ ஒருவர் தனது சுயநல தேவைக்காக அடுக்கி வைத்திருக்கின்றார். இதனால் குப்பைக் கூண்டுகளில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்க்கு துப்புரவு பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
செங்கற்கள் நடுவே இருந்த குப்பை கூண்டுகளை வெளியே நடு ரோட்டில் இழுத்து குப்பைகளை அள்ளும் அவலநிலையும், இதனால் குப்பை கூண்டுகள் உடைந்து போகும் வாய்ப்பும் இருக்கிறது.
தூர்நாற்றம் வீசும் குப்பைகள் வீதியில் சிதறிக் கிடந்தாலோ அல்லது கழிவு நீர் கால்வாய் வீதியில் தேங்கி நின்றாலோ மூக்கை பொத்தி முகம் சுழித்துக் கொண்டு செல்லும் நாம் நமது சுயநலத்தால் தெருவில் தூய்மைப் பணியில் ஈடுபடும் இந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு சிரமமும் இடையூறுகளும் தர வேண்டாமே..
ஹனீஃப் பள்ளி அருகே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்த செங்கற்களை சம்பந்தப்பட்டவர்கள் சுயநலமின்றி அகற்றி பிறர் நலம் நாட வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட Cmp லைன் பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...