Saturday, September 13, 2025

நாடாளுமன்ற தேர்தல் 2024 : ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்(IMMK) அதிமுகவிற்கு ஆதரவு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தல் 2024 களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்களுக்கான ஆதரவை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மக்கள் மத்தியில் பெற்று வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுகவும் , எதிர்க்கட்சியான அதிமுகவும் மக்களின் ஆதரவை பெறுவதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்பட்டுக்கொண்டு வருகின்றனர்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கு மற்றொரு புறம் திமுக அதிமுகவிற்கு தங்களுடைய ஆலோசனைகளை பல்வேறு அமைப்புகளும் இயக்கங்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்(IMMK) எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்க்கு ஆதரவளித்து அந்த அமைப்பின் தலைவர் ஹைதர் அலி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து ஹைதர் அலி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளதாவது.,,

கடந்த 2023 டிசம்பர் 13-ம் தேதி அன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் எஸ்பிவேலுமணி அவர்கள் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைமை அலுவலகத்திற்கு வந்து ஆதரவு கேட்டதை தொடர்ந்து, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு, இன்று ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் செஹைதர்அலி அவர்களின் தலைமையில், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பாளைரஃபீக், பொருளாளர் திருப்பூர்ஹாலிதீன் மற்றும் துணைத் தலைவர் முஷாஹுதீன் ஆகியோருடன், அஇஅதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று, அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி அவர்களுடன் இனிய சந்திப்பு நடைபெற்றது.

இதில் அஇஅதிமுக கூட்டணியில் போட்டியிட தயாராக உள்ள இஸ்லாமிய கட்சிகளுக்கு தேர்தலில் சீட்டு தர வேண்டும் எனவும், அதேபோல அஇஅதிமுக கட்சியில் இஸ்லாமியர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அஇஅதிமுக-விற்கு ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆதரவளிப்பதாக மொழியப்பட்டது.

அனைத்தையும் கேட்டு அறிந்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியை ஆதரிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியையும் கொடுத்தார்.

என்று பதிவிட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img