Monday, May 6, 2024

4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 250 கிமீ ஓடும் – ஆந்திராவில் அறிமுகமாகும் பேட்டரி பஸ்..!!

Share post:

Date:

- Advertisement -

ஆந்திராவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஜனவரி முதல் புதிய பேட்டரி பஸ்கள் இயக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

.வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பயணிகளுக்கு புத்தாண்டு பரிசாக இந்த புதிய பேட்டரி பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது. இந்த பஸ், 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் வரை செல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ.3 கோடி மதிப்புள்ள இந்த பேருந்துக்காக மத்திய அரசு ரூ.80 லட்சம் மானியம் வழங்கி உள்ளது. முதல் கட்டமாக இந்த பேட்டரி பஸ் கன்னவரம் விமான நிலையத்திலிருந்து வெலகம்புடிவரை இயக்கப்படும். மேலும், படிப்படியாக முக்கிய நகரங்களில் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. ஏசி வசதி கொண்ட சொகுசு பேருந்துகள் விலை ரூ.1 கோடியே 20 லட்சம் இருந்த நிலையில் தற்போது பேட்டரி பேருந்தை ரூ.3 கோடிக்கு வாங்கி பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...