சென்னையில் இருந்து பொதுவாகவே தினம்தோறும் பலர் கும்பகோணம், மன்னார்குடி, மதுக்கூர், பட்டுகோட்டை, அதிரை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கின்றன.
தற்போதைய கோடை வெயிலின் தாக்கத்தாலும், விரைவாக செல்லவும் பொதுமக்கள் சொகுசு பேருந்துகளை நாடுகின்றனர்.
அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுவது அனைவரும் அறிந்ததே.,
இந்நிலையில், நேற்று(10/04/2018) செவ்வாய் கிழமை இரவு சென்னையிலிருந்து கும்பகோணம் வழியாக வந்த தனியார் பேருந்து மன்னார்குடி அருகே விபத்திற்குள்ளானது.
ஆனால், அதிஷ்டிரவசமாக உயிர் சேதம் இல்லாமல், பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாகவே பேருந்து விபத்து என்றால் ஒரு சிலர் உயிர் தப்புவது என்பதே அதிசயம்.ஆனால், இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.