அரபி நாடுகளில் ஒன்றான குவைத்தில் உள்ள சுபுஹான் என்ற பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குவைத்தில் நேற்று (29/07/2018) வெள்ளிக்கிழமை இரவு சுபுஹான் என்ற பகுதியில் உள்ள
ABC தனியார் குளிர்பான நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு துறையினர் சற்று திணறினர். இந்த தீவிபத்தினால் அப்பதி மக்கள் அச்சமடைந்தனர்.