Home » தக்வா பள்ளியின் நிர்வாகத்தில் அரசியல் சாயம் கலக்க கூடாது!

தக்வா பள்ளியின் நிர்வாகத்தில் அரசியல் சாயம் கலக்க கூடாது!

2 comments

அதிரை புதியவன்

தமிழகத்தில், 1980 வரை ஜமாத் அமைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செயல்பட்டதும் ஏறக்குறைய அரசியல் கட்சிகளை போலத்தான்.

இரு பெரும் கழகம் சார்ந்த ‘கரை கைலிகள் ‘ அணிந்த முஸ்லிம் உடன் பிறப்புக்களும் – இஸ்லாமிய இரத்தத்தின் இரத்தங்களும்தான், பள்ளிவாசல் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.

அரசியலில் நடப்பது போலவே ஜமாத் தலைமைக்கு போட்டி போடுவது, அதற்காக, ஆட்களை பிடித்தல், கடத்தல் மற்றும் அடிதடிகள் உள்ளிட்டவைகள் நடப்பதாக நாம் அரிந்திருக்கின்றோம்.

இந்த இழி நிலைமை மாறுவதற்கு, தமிழக முஸ்லிம்கள் மத்தியில் ஓரிறை கொள்கையை வலியுறுத்தும் இயக்கங்கள் வலுப்பெற ஆரம்பித்தது மிக முக்கியமான காரனம்.

அதன் வமீட்டிட அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து பெரும்பாலான ஜமாத்கள் வெளியேறி ஜனநாயக முறையில் ஜமாத் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் முறை வளர ஆரம்பித்தது.

முஹல்லாவில் உள்ள ஆண்கள் அனைவரும் கூடி, ஒரு மித்த நிலை எடுக்க இயலாத பட்சத்தில் ஓட்டெடுப்பு மூலம்மும் நிர்வாகம் முடிவு செய்யப்படுகிறது.

சுருக்கமாக, ஜமாத் நிர்வாகிகள் தேர்தலின் போது ஒட்டுமொத்த சமுதாய நலனை கருத்தில் கொண்டுதான் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் அதனால், பணச்செல்வாக்கு மற்றும் வாரிசுரிமை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இஸ்லாமிய அறிவு பெற்றவர்களும், ஐவேளை தொழுபவர்களும் தான் பெரும்பாலான ஊர்களில் ஜமாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

ஆனால் விசித்திரமாக அதிராம்பட்டினத்தின் பாரம்பரியமாக இருக்கும் துலுக்கா பள்ளியின்(தக்வாப்பள்ளி) நிர்வாகத்தில் மட்டும் ஏன் இவ்வளவு குளறுபடி?

அதிக சொத்துக்களை கொண்ட இப்பள்ளியின் நிர்வாகிகளாக வர கிட்டத்தட்ட அரசியலை போன்றே போட்டோ போட்டி !

ஒருவர் மட்டுமே இரண்டு முறை விண்ணப்பிப்பது, பள்ளியின்.மீது வழக்கு போட்டவரே விண்ணப்பங்கள் அளிப்பது, பள்ளியின் ஆவணங்களை வீட்டிற்கு எடுத்து சென்றவர் வீம்பாக விளையாடுவது, உள்ளிட்ட அனைத்து அநீதிகளும் இழைக்கப்பட்ட பின்னரும்ம்ச் மீண்டும் பள்ளியின் நிர்வாகத்திற்கு வர துடிப்பது ஏன் என தெரியவில்லை.

அல்லாஹ்வின் ஆலயத்தை கட்டிக்காப்பவர்கள், இறை அச்சத்துடனும் தூய நெரியுடனும் இருக்க வேண்டும் என்பதே நியதி.

எனவே மேற்கண்ட க(ழ)லகங்கள் இல்லாத ஒரு ஜனநாயக முறையிலான ஜமாத்தார்கள் ஒன்று கூடி ஏற்படுத்தும் நிர்வாகமே சிறந்த நிர்வாகமாகும்.இதனை

எனவே தக்வா பள்ளிக்கு உட்பட்ட ஜமாத்தார்கள் ஒன்றிணைந்து வக்பு வாரியத்திற்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து சிபாரிசு செய்திட வழிவகை செய்திடல் வேண்டும்.

இதுவே எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாகவும், இழந்து நிற்கும் வக்பு சொத்துக்களை மீட்டிட வழிவகை செய்திட வேண்டும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter