Monday, February 2, 2026

மல்லிப்பட்டிணத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம், அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் நியாய விலைக்கடையில் கட்டுங்கடங்காத மக்கள் கூட்டம்.

தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசும்,ரூபாய் 1000ம் அறிவித்துள்ளது. ஜனவரி 8ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசுகள் வழங்கி தொடங்கி வைத்தார். மல்லிப்பட்டிணம் நியாய விலைக்கடையில் நேற்றிலிருந்து(ஜனவரி 10) இலவச பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது.ஒரு நாளைக்கு முன்னூறு என்ற அடிப்படையில் வழங்கி வருகின்றனர்.மேலும் பெண்களின் கூட்டமும் மிக அதிகமாகவே காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து இன்று(ஜன 11) காலை 6 மணி முதலே மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கி உள்ளது.ஒன்பதரை மணி ஆன போதும் இதுவரை நியாயவிலைக் கடையை அதிகாரிகள் திறக்கவில்லை.

இதுகுறித்து நம்மிடம் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த நிஜாம் தெரிவிக்கையில், இந்தக் கூட்டத்தை தவிர்க்க முன்கூட்டியே ரேசன் கடைகளை அதிகாரிகள் திறப்பதன் மூலமும்,பணத்தை வங்கியின் மூலம் செலுத்துவதன் மூலம் பெரும் கூட்ட நெரிசலை தவிர்த்து இருக்கலாம் என்று கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img