Friday, March 20, 2026

அதிரை மாஜ்தா ஜூவல்லரியில் நூதன திருட்டு,குற்றவாளிகளை பிடிக்குமா காவல்துறை….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் திலகர் தெருவில் உள்ள மாஜ்தா ஜீவல்லரியில் நூதன கொள்ளை.

கடற்கரைத் தெருவை சார்ந்த OKM.சிபகத்துல்லாஹ் பல ஆண்டுகளாக அதிரையில் மாஜ்தா ஜூவல்லரி கடை என்று வைத்து நகை வியாபரம் செய்து வருகிறார்.மேலும் அவர் சில தன்னார்வ அமைப்புகளிலும் செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் வழக்கம்போல் தனது கடையை நேற்று்(ஜனவரி 24) அடைத்துவிட்டு அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார்.இன்று காலையில் எழுந்து வெளியே பார்க்கையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளனர்.மேலும் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகள் ரெக்காட் செய்யும் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்து சென்றுவிட்டனர்.

சம்பவத்தையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டது.காவல்துறை SP தலைமையிலான குழு கைரேகை மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் குற்றவாளிகள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அதிரையில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

அதிரையில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்த போதும் காவல்துறையினரின் தொடர் அலட்சிய போக்கே இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img