இன்று தமிழ்புலிகள் கட்சியின் சார்பாக ஐ.நாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை மிரட்டிய சிங்கள அரசை கண்டித்து நடந்த இலங்கை துணைதூதரகம் முற்றுகை போராட்டத்தில் ஆதரவு தெரிவிக்கச் சென்று விட்ட தேநீர் கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி. தோழர் பிரவிண் குமார் இரண்டு பேரையும் தீடிரென்று வந்த காவல்துறை வாகனம் எந்த அறிவிப்புமின்றி தரதரவென தோழர்களை இழுத்து சென்றிருக்கிறது. தோழர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்ற விபரம் ஏதும் தெரியவில்லை. இருவரும் நுங்கம்பாக்கம் f3 காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.