Sunday, February 1, 2026

முகமது அக்லாக் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு யோகி கூட்டத்தில் முதல் வரிசை : ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம்!

spot_imgspot_imgspot_imgspot_img

உ.பி. மாநிலம் தாத்ரியில் உள்ள பிஷாரா கிராமத்தில் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றிய தேர்தல் கூட்டத்தில் பசுக்குண்டர்களால் முகமது இக்லக் என்ற முஸ்லிம் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முதல்நிலை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட விஷால் சிங், மற்றும் 16 பேர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகேஷ்சர்மா என்ற வேட்பாளருக்காக யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டார். இவர் கவுதம்புத் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராவார்.

2015-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி நாட்டை உலுக்கிய அந்த கொடூர சம்பவத்தில் பிஷாரா கிராமத்தைச் சேர்ந்த முகமது அக்லாக் என்ற முஸ்லிம் பசு இறைச்சியை வைத்திருந்ததாக அவரை வீட்டிலிருந்து இழுத்து வந்து பசுக்குண்டர் படை தாக்கிக் கொலை செய்தது.

இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட விஷால் சிங் பிற்பாடு தான் எதுவுமே செய்யவில்லை தன் மீது பொய் வழக்குப் போட்டதாகத் தெரிவித்தார். இப்போது அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர், அக்லாக் கொலை வழக்கு நீதி கிடைப்பது இனி கடினமே.

இந்நிலையில் அக்லாக் கொல்லப்பட்ட இதே கிரமாத்தில் யோகி ஆதித்யநாத் கூட்டத்தின் முதல் வரிசையில் குற்றம் சாட்டப்பட்ட விஷால் சிங், மற்றும் 16 பேர் அமர்ந்து ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img