தஞ்சை மாவட்ட கிரசென்ட் பிளட் டோனர்ஸ் (CBD) தன்னார்வல அமைப்பின் சார்பில் கஜா புயலால் பாதிக்கபட்ட பகுதிகளில் மரம் நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், ஊரணிபுரம் ஸ்ரீ கிருஷ்னா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இன்று (28/06/2019) மாலை பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளின் பெயரில் CBD அமைப்பினர் பள்ளி மாணவர்களின் மத்தியில் மரம் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
இந்நிகழ்வில், CBD அமைப்பின் மாநில நிர்வாகி குர்ஷீத் ஹுசைன், CBD தஞ்சை மாவட்ட தலைவர் பேரா. செய்யது அகமது கபீர், CBDன் மாவட்ட துணை தலைவர் அதிரை கலீஃபா, CBDன் அதிராம்பட்டினம் நகர நிர்வாகிகள் அப்ரித் கான், சமீர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜர், சமூக ஆர்வலர் ரேஷ்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.