புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மேலத்தானியத்தை சேர்ந்தவர்கள் அப்துல்லா மகன் சதாம்உசேன்(28), உதுமான் மகன் அசாருதீன்(25), இக்பால் மகன் ராசித் (25) ஆகிய மூவரும் நண்பர்கள் இவர்கள் மூவரும் வேலையின் காரணமாக காரில் நேற்று மாலை புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டு மீண்டும் மேலத்தாணியத்திற்கு வந்துகொண்டு இருந்தனர். அந்தகார் பெருமாநாடு அருகே உள்ள செல்லுகுடி விளக்கு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தில் பலத்த சப்தத்துடன் மோதியது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் விரைந்து சென்று, இறந்தவர்களின் உடலை கைப்பற்றி புதுகை அரசு மருத்துவ கல்லுhரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். காரில் வந்த 3 பேரும் இறந்து போனதால் காரை ஓட்டி வந்தவர் யார் என்பது, தெரியவில்லை. இதுகுறித்து, திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே ஊரை சேர்ந்த 3 பேர் இறந்து போனதால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது. இதில் சதாம் உசேன் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். ராசித்அலி வெளிநாட்டில் இருந்து வந்து மொபைல் கடை வைத்துள்ளார்.
அசாருதீன் என்பவர் புதுக்கோட்டையில் ஐஏஎஸ் அகடாமி நடத்தி வருகின்றார்.
புதுக்கோட்டை அருகே கார் புளியமரத்தில் மோதிய விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த நண்பர்கள் 3 -பேர் பலி..
329
previous post