Friday, March 13, 2026

போலீசாருக்கு எச்சரிக்கை! லஞ்சம் வாங்கினால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

காவல் துறையில் பணியாற்றும் போலீசார் யாரேனும் லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற தீர்ப்பில் தமிழகம் முழுவதும் காவல்துறையை சேர்ந்தவர்கள் மாமூலாக பணம் பெறுவது பொதுமக்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் பணியாற்றும் போலீசார், ஊரக பகுதிகளில் பணியாற்றும் போலீசார் எல்லா இடங்களிலும் லஞ்சம் பெறுகின்றனர். மார்க்கெட், கடைகள், உணவகங்கள் என பல்வேறு இடங்களில் இருந்தும் போலீசார் பரிசுப்பொருட்கள், அன்பளிப்புகளை பெறுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, சட்டவிரோதமாக பணம், மாமூல் பெறுவது ஊழல் தடுப்பு சட்டம் 1988 ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். போலீசார் லஞ்சம், மாமூல் வாங்குவது தெரியவந்தாலோ, கண்டறியப்பட்டாலோ, அது தொடர்பான ஆவணங்கள் கைபற்றப்பட்டாலோ லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுப்பார்கள். அதை தொடர்ந்து அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். எனவே, தமிழக காவல் துறையில் உள்ள அதிகாரிகள் விதிகளை முறையாக பின்பற்றி, திடீர் சோதனை நடத்தி, சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img