140
அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில், வெளிநாடு வாழ் அதிரையர்கள் பங்கேற்புடன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி அதன் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் என்.ஃபத்ஹுத்தீன் கருத்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் வெளிநாடு வாழ் அதிரை பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.