ஊடகங்களில் இருக்கும் சில பிரிவினர் இயக்கத்திற்கு எதிராக தொடங்கியுள்ள அவதூறு பிரச்சாரத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து PFIயின் செய்தி தொடர்பாளர் ஷஃபிகுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கையில்.
இதுRSS போன்ற ஹிந்துத்துவ அமைப்புகள் செய்து வந்த பழைய பொய் பிரச்சாரத்தின் மறுபதிப்பு என்பதை தாண்டி வேறொன்றுமில்லை. என்றும், என்.ஐ.ஏ வை மேற்கோள் காட்டி ஊடகங்கள் பட்டியலிடும் வழக்குகள் மிகவும் அற்பமானவை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,அவ்வழக்குகள் ஒரு இயக்கமாக பாப்புலர் ஃப்ரண்ட்-டுடன் சற்றும் தொடர்பற்றவை. இந்த தவறான அவதூறு பிரச்சாரத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கோள்ள பாப்புலர் ஃப்ரண்ட் முடிவுசெய்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.