Saturday, March 21, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் இணையதளம் மூலம் பெயர் சேர்க்கலாம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டோர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் பெயர்களை சேர்க்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல், 2019 தொடர்புடைய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்களில் உள்ள விவரங்களை கொண்டு தயாரிக்கப்பட்டு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பதிவு அலுவலரால் மாவட்ட தேர்தல் வாக்காளர் பட்டியல்கள் ேநற்று வெளியிடப்பட்டது.

மேற்கண்ட வாக்காளர் பட்டில்களில் வரைவு பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் http://www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் முதலில் அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க வேண்டும். அதற்கு அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது தொடர்புடைய இணையதளத்திலோ சென்று அவர்களது பெயர்களை சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இணையதளம் மூலம் பெயர் சேர்க்க விரும்புவோர் தங்களது பெயர் மற்றும் விவரங்களை http:// www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலமாக பதிவு செய்யலாம் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img