அதிரை மக்களுக்கு என்றும் அச்சுறுத்தலாக இருப்பது என்னவோ சுகாதாரம் மட்டுமே.
ஆளும் வர்க்கமும் அதிகார வர்கமும் அதிரையைகளின் நலனில் கிஞ்சிற்றும் அக்கரையற்று இருப்பதால் தான் இன்று அதிரை மக்களை ஆட்டி படைக்கும் டெங்கு உள்ளிட்ட உயிரைப் பறிக்கும் நோய்கள் நிறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் அதிரை மெயின் ரோட்டில் உள்ள வனிகவளாகம் எதிரே கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு நீர் ஓட வழியின்றி நீண்டகாலமாக தவியாய் தவிக்கிறது.
இதில் இருந்து உற்பத்தியாகும் ராட்சத கொசுக்கள் மக்களை கடித்து நோயை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் இந்த கழிவு நீர் வடிகால் மீது உணவகம் ஒன்று இயங்குகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிரையின் சுகாதார அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மேற்கண்ட பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.