குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில்🎙, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சைக்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழக்கமான பரிசோதனையே செய்யப்பட்டுள்ளது. நாளை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளனர்.