Monday, September 9, 2024

நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு இரு குழந்தைகளுடன் தீக்குளித்த தம்பதி!

spot_imgspot_imgspot_imgspot_img

 

கந்து வட்டிக் கொடுமை காரணமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளித்த கணவன் மனைவி உட்பட நான்கு பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த இசக்கி முத்து மற்றும் சுப்புலட்சுமி தம்பதியர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளனர். இதற்கு கந்து வட்டியாக இதுவரை இரண்டு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் தொடர்ந்து கடன் கொடுத்த கும்பல் இவர்களை பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். காவல்துறை மூலமாக இவர்களை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இது குறித்து பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த இசக்கி முத்து தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உடலில் மண்ணெண்னெய் உற்றிக் கொண்டு திடீரென தீக்குளித்தார். 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த நிலையில், தீக்குளித்தவர்களை அங்கிருந்த யாரும் காப்பாற்ற முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த போலீசார் தீக்குளித்தவர்களை மீட்டனர்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நால்வருக்கும் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நெல்லை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தீக்குளிப்பு சம்பவம், கந்து வட்டி கொடுமை குறித்து விசாரித்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதியளித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அமீரகத்தில் கலக்கும் அதிரையர் இர்ஃபான் அலி – கைப்பந்தாட்ட நாயகன் விருதை...

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டியில் பிரபல வீரர்களை பந்தாடிய இர்ஃபான் அலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த போட்டியில் கர்நாடக அணியின்...

நாற்றமெடுக்கும் நாதக விவகாரம் – ஹிமாயூன் கபீரால் காணாமல் போகும் கட்சி...

நாம்தமிழர் என்ற கட்சி எப்படி அசுர வேகத்தில் வளர்ந்ததோ அதே அசுர வேகத்தில் வீழ்ச்சிக்கும் சென்று கொண்டுள்ளன. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக...

அதிரை நகராட்சியில் தொடரும் விதிமீறல் :மூடி மறைக்கப்பட்ட டெண்டர் நிறுத்திவைப்பு.

அதிராம்பட்டினம் நகராட்சியில் விதிமுறைகளுக்கு மாறாக டெண்டர் மற்றும் மக்கள் பணிகள் குறித்து பொது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. நிர்வாக காரணங்களுக்காக கிழக்கு மேற்கு...
spot_imgspot_imgspot_imgspot_img