சீன இயந்திரம் தொடர்பான
மீனவர்கள் பிரச்சனையில் அமைச்சர்
ஜெயக்குமார் தீர்வு காணவில்லை
என்றால் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி
கையில் எடுக்கும் என்று சீமான்
எச்சரித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் பகுதியில்
மீனவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்த பின்னர்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
சீமான் செய்தியாளர்களை
சந்தித்தார். அப்போது, சீன இயந்திரந்தை
பயன்படுத்துவதன் மூலம் 2 மாதங்களில்
பிடிக்க வேண்டிய மீன்களை ஒரே மாதத்தில்
பிடித்து விடுகின்றனர். இதனால் விவசாயம்
அழிந்தது போல் மீன்பிடி தொழிலும்
அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை
நீடித்தால் மீனவர்கள் நாடு விட்டு நாடு
சென்று மீன்பிடிக்கும் அவலநிலை தான்
ஏற்படும்.
இதனை எதிர்த்து போராடிய மீனவர்கள் மீதும்
பெண்கள் மீதும் காவல்துறை
தாக்குதல் அநாகரீகமான
காட்டுமிரண்டிதானம். அவர்களின்
உணர்வுகளுக்கு மதிப்பளித்து சீன
இயந்திரத்தை பயன்படுத்த அரசு உரிய
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மீனவர்கள் போராட்டத்தை நாங்கள் கையில்
எடுத்து கொள்ளாமல் அமைச்சர்
ஜெயக்குமார் தகுந்த நடவடிக்கை எடுக்க
வேண்டுமென்று சீமான் கேட்டுக்
கொண்டார்.
அமைச்சர் ஜெயக்குமாருக்கு சீமான் எச்சரிக்கை
481