80
அதிராம்பட்டினம் மேலத்தெரு, சதாம் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நாள்தோறும் குடிநீர் சப்ளை பேரூராட்சி நிர்வாகத்தால் செய்யப்படுகிறது.
இதில் புதுமனைதெரு CMPலைன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சதாம் நகரில் உள்ள நீர்தேக்க தொட்டியில் இருந்து கிடைக்கும் குடிநீர் கடந்த இரண்டு நாட்களாக கிடைக்கவில்லை.
ரமலான் காலம் என்பதால் மாலை நேரத்தில் விநியோகம் செய்யப்படும் நீர் கிடைக்காத காரணத்தால் தனியார் கேன் குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து குடிநீர் தொடர்பாக பொறுப்பாளர் பால்சாமியை தொடர்பு கொள்ள இயலவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.