16
இந்தியாவில் ஊரடங்கு நோக்கம் தோல்வி அடைந்துவிட்டதாக ராகுல்காந்தி தெரிவித்தார்
கொரோனா நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல்காந்தி . அப்போது பேசிய அவர், இந்தியாவில் ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து தெரிவித்த அவர்,
”அதிவேகமாக கொரோனா உயரும் நாடாக இந்தியா உள்ளது. நாம் இப்போதுதான் ஊரடங்கை நீக்குகிறோம். ஊரடங்கின் நோக்கமும், தேவையும் தோல்வியடைந்துவிட்டது. ஊரடங்கு தோல்வி அடைந்ததன் விளைவை இந்தியா சந்தித்து வருகிறது” என தெரிவித்துள்ளார். மேலும் லடாக் எல்லைப் பிரச்னை, நேபாளம் எல்லைப் பிரச்னை தொடர்பாகவும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். அரசு வெளிப்படையாக நடப்பதை தெரிவிக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.