87
அதிரை எம்.எம்.எஸ் குடும்பத்தினர் ஆரம்பம் முதலே தமிழக அரசியலிலும் அரசு துறையிலும் செல்வாக்குடன் இருந்து வருகின்றனர். இதனிடையே தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரான பஷீர் அகமது கடந்த 5ம் தேதி மேலத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார்.
இந்நிலையில் தமிழக காவல்துறை இயக்குநரும் எம்.எம்.எஸ் குடும்ப நண்பருமான டி.கே.ராஜேந்திரன் அதிரைக்கு நேரில் வந்து ஆறுதல் கூறினார். மேலும் எம்.எம்.எஸ் பஷீர் அகமதுவின் மரணத்தால் தனது சொந்த சகோதரரை இழந்துவிட்டதாக உருக்கமாக தெரிவித்தார். பின்னர் பெரிய ஜும்மா பள்ளியின் மையவாடிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.