191
பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் உள்ள ரத்த சேமிப்பு வங்கியில் ரத்தவகை இருப்பு குறைந்ததை அறிந்த 25 இளைஞர்கள், தாமாகவே முன்வந்து ரத்ததானம் தந்திருக்கிறார்கள் என்ற செய்தியறிந்து அதுகுறித்து விசாரித்தோம்.
இரண்டு வாரங்களுக்கு முன், பாலமுருகன் என்பவருக்கு பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையிலிருந்து போன் வந்திருக்கிறது. அதில் பேசியவர், பாலமுருகனுக்கு நன்கு அறிமுகமான நியூட்டன் என்பவர். மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர். அங்குள்ள ரத்த சேமிப்பு வங்கியில் ரத்த வகைகளின் இருப்பு வெகுவாகக் குறைந்திருப்பதை எடுத்துச்சொல்லி, யூனிட் இருப்பு அதிகரிக்க உதவும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்.