Sunday, February 1, 2026

அதிரையில் CBD அமைப்பு சார்பில் இரத்த கொடையாளர் சேர்க்கை முகாம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:-   தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் CBD அமைப்பு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் அவசர தேவைக்கு இரத்ததானம், அவசர மருத்துவ உதவி, பேரிடர் மீட்பு குழு போன்ற பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்துவருகிறது. CBD அமைப்பின் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று(15/12/2017) பகல் சுமார் 12மணியளவில் அதிராம்பட்டினம் மேலத்தெரு ஜும்மா பள்ளிவாசல் அருகாமையில் அதிரை நகர் கிரசண்ட் பிளட் டோனர்ஸ்(CBD) அமைப்பு சார்பில் இரத்த தான கொடையாளர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தங்களின் பெயர், இரத்த வகை, தொலைபேசி எண், முகவரி போன்ற தகவல்களை ஆர்வத்துடன் அளித்து CBDல் கொடையாளர்களாக இணைத்துக் கொண்டனர்.

 

இம்முகாமிற்கு CBDயின் மாவட்ட துணை தலைவர் அக்லன் கலீஃபா(அதிரை கலீஃபா) அவர்கள் தலைமை தாங்கினார்.

இக்கொடையாளர் சேர்க்கை முகாமிற்கு CBDயின் அதிரை நகர தலைவர் இப்ராஹிம் அலி அவர்கள் முன்னிலை வகித்தார்.

இம்முகாமில் CBDயின் செயற்குழு உறுப்பினர்களான சமீர் அலி, அப்ரித் , ஃபாய்ஸ் அஹ்மது மற்றும் CBDயின் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img