அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி இன்று 12/06/2023 மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு மைதானத்தில் தொடங்கியது.
இன்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தை அதிரை நகரமன்ற தலைவர் MMS. தாஹிரா அம்மாள் அப்துல் கரீம், நகரமன்ற துணைத்தலைவர் இராம. குணசேகரன், கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத் தலைவர் V.M.A. அகமது ஹாஜா, செயலாளர் P.G.T. முஹம்மது இஸ்மாயீல், அனைத்து முஹல்லா கூட்டமைப்பு தலைவர் தாஜுதீன், கீழத்தெரு முஹல்லா தலைவர் ஜியாவுதீன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இன்று நடைபெற்ற முதல்நாள் ஆட்டத்தில் யுனைடெட் 7s நாகூர் அணியினரும் மன்னார்குடி அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் யுனைடெட் 7s நாகூர் அணி, 4-3 என்ற கோல் கணக்கில் மன்னார்குடி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளைய தினம்(13/062023) ஆட வேண்டிய அணிகள் :
ராயபுரம் 7s சென்னை vs திண்டுக்கல் 7s திண்டுக்கல்
இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்