அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
இதில் இன்று நடைபெற்ற பத்தாம் நாள் ஆட்டத்தில் தென்னரசு FC பள்ளத்தூர் அணியினரும் W.O.G.A 7s பாண்டிச்சேரி அணியினரும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது பள்ளத்தூர் அணி. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கோலாக மாற்றி பாண்டிச்சேரியை பந்தாடியது பள்ளத்தூர் அணி. இதனையடுத்து இறுதிநேர ஆட்ட முடிவில் தென்னரசு FC பள்ளத்தூர் அணி, 4-0 என்ற கோல் கணக்கில் W.O.G.A 7s பாண்டிச்சேரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளைய தினம்(24/06/2023) ஆட வேண்டிய அணிகள் :
டான் போஸ்கோ மதுரை vs களாகோ தஞ்சாவூர்
இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்