அலைக்கழிப்பு உள்ளிட்ட அதிரை நகராட்சியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடையும் பொதுமக்கள் உரிய தீர்வை பெற நீதிமன்றத்தை நாடுவது வழக்கம். அவ்வாறு அதிரை நகராட்சிக்கு எதிராக தொடரப்படும் நீதிமன்ற வழக்குகளில் இதுவரை அதிரை நகராட்சியின் சார்பில் வழக்கறிஞர் தீனதயாளன் ஆஜராகி வந்தார். இந்நிலையில் தற்போது அவரிடம் இருந்த அனைத்து வழக்குகளையும் வழக்கறிஞர் பி.எஸ்.ஜெயக்குமாரிடம் மாற்ற அதிரை நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த வழக்குகளுக்கான உத்தேச செலவினமாக ரூ.5லட்சம் என கணக்கிட்டிருக்கும் நகராட்சி நிர்வாகம், அதனை பொது நிதியிலிருந்து செலவு செய்ய தீர்மானித்திருக்கிறது. நகரில் தெரு விளக்கு, கொசுத்தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் சூழலில் வழக்கு செலவினத்திற்காக மட்டும் உத்தேசமாக ரூ. 5லட்சத்தை ஒதுக்கீடு செய்திருப்பது அதிருப்தி அளிப்பதாக கூறும் பொதுமக்கள், எதிர்காலத்தில் இந்த வழக்குகளுக்கு காரணமான அலுவலர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பணத்தை வசூலித்து வழக்குகளை நடத்துவது தான் சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
அதிரை நகராட்சியின் வழக்குகளை நடத்த மட்டும் ரூ.5லட்சமாம்! கரையும் மக்களின் வரிப்பணம்!!
583