அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
இதில் நேற்று நடைபெற்ற பதினொன்றாம் நாள் ஆட்டத்தில் டான் போஸ்கோ மதுரை அணியினரும் களாகோ தஞ்சாவூர் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டான் போஸ்கோ மதுரை அணி, 4-0 என்ற கோல் கணக்கில் களாகோ தஞ்சாவூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.