03 ஜனவரி 2022 அன்று அதிராம்பட்டினத்தில் இருந்து மல்லிப்பட்டினம் செல்லும் ECR சாலையில் அகமது அஷ்ரப் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசியல்வாதி ராஜாவின் 13-15 நபர்களை கொண்ட அடியாட்கள் அகமது அஷ்ரப் மீது PETROL பாட்டிலை எறிந்தார்கள் அகமது அஷ்ரப் தடுமாறினார். அவர்கள் தீ குச்சியை எடுத்து அகமது அஷ்ரப் ஐ நோக்கி எரிய முற்பட்ட போது, வாகனத்தில் இருந்து குதித்தேன் அவரது இருசக்கர வாகனம் தீயில் கருகியது அங்கிருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடியும், விடாமல் என்னை துரத்தினார்கள் அதிரை காதிர் முகைதின் கல்லூரி மசூதியின் சுவர் ஏறி குதித்து மறைந்து கொண்டார் அகமது அஷ்ரப். கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு அந்த கும்பல் அவரை தேடி கொண்டே இருந்தது. பிறகு 1 மணி நேரம் கழிந்த பின் அங்கிருந்து தப்பித்து அவரது வீட்டிற்கு செல்லும் வழியில் மீண்டும் அந்த கும்பல் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்தும், அவரது வீட்டிற்கு செல்வது சாத்தியமற்றதாக இருந்தது, அப்போது உறவினர் அப்துல் வஹாப் வீட்டிற்க்கு தங்க சென்று தஞ்சமடைந்தார் அந்த நாள் கடந்தது பல நாட்கள் தலைமறைவாக இருந்து வருகிறார் அகமது அஷ்ரப்.
