Home » அதிராம்பட்டினத்தில்  மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் !

அதிராம்பட்டினத்தில்  மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் !

by Admin
0 comment

அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையில் வசித்தவர் செல்லமாள் வயது 92 தனது பேத்தியுடன் தனியே வசித்து வந்த செல்லமாளுக்கு வயது மூப்பின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3-30மணியளவில் இயற்க்கை எய்தியுள்ளார்,இதனை அடுத்து அவரது பேத்தி கார்த்திகா SDPI கட்சியினரை தொடர்பு கொண்டு தனது பாட்டியின் இறுதி சடங்கை நிறைவேற்றி தரும்படி கோரியுள்ளார். அதன்படி SDPI ஆம்புலன்ஸ் மூலம் உடலை அதிராம்பட்டினம் பொது மயானத்திற்கு கொண்டு சென்று இறுதி மறியாதை செலுத்தப்பட்டு இந்து முறைப்படி அடக்கம்.செய்யப்பட்டது.

இறந்த மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி இஸ்லாமியர்கள் அடக்கம்.செய்த நிகழ்வு நல்லிணக்கற்கு எடுத்துக்காட்டாக உள்ளன என அப்பகுதி மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter