லூற்று பாய் இவரை தெரியாத அதிரையர்களே இருக்காது எனலாம் !
80வயது முதியவரான இவர் அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி தர்ஹா அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது பெயர் இஸ்மத் யூனுன் ஆகும், இவரது தகப்பனார் பெயர் மொய்னுதீன் என்றும் இவர் பர்மாவில் உள்ள லூற்று என்ற ஊரில் பிறந்து வசித்தவராவார். காலப்போக்கில் அதிரைக்கு புலம் பெயர்ந்த மொய்னுதீன் முக்கிய பிரமுகர் ஒருவரது கடையில் வேலைக்கு கேட்டிருக்கிறார் அப்போது அவர ஊரை வினவிய போது லூற்று என கூறியதை அடுத்து அவரை அக்குடும்பத்தினர் லூற்று மரைக்கா என அளித்துள்ளனர்.
அவரது மகனான இஸ்மத்தை சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் சேர்த்து விட்டார் மொய்னுதீன், அங்கு அவரை லூற்று பாய் என்ற பெயரை வைத்தே அழைத்ததால் இன்று வரை அவருக்கு லூற்று பாய் என்ற பெயர் நிலைத்து இருக்கிறது.
இவரிடம் விசாரித்த வகையில் தமக்கு நிறைய பிள்ளை செல்வங்கள் உண்டென்றும் இருந்தாலும் தன் கையை நம்பியே இதுவரை வாழ்ந்து வருவதாக கூறினார்.
( லூற்று என்ற ஊரை கூகுலில் தேடினேன் கிடைக்கவில்லை)
மார்றோரு பெயர் காரணத்துடன் மீண்டும் சந்திப்போம் என கூறி விடைபெறுவது…
நான் உங்கள் ஹசன்….
இறைவன் நாடினால் தொடரும்…..