அதிராம்பட்டினம் : வரி கட்டியும் வடிகால் வசதி செய்து தர மறுக்கும் நகராட்சி – உட்கட்சி பூசலால் தமக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் கடந்த 8 ஆண்டுகளாக இந்த இழப்பு ஏற்பட்டு வருவதாக திமுகவின் முன்னோடி ஒருவர் கூறுகிறார்.
அதிராம்பட்டினம் நகராட்சி வார்டு எண் 2க்கு உட்பட்ட அம்பேத்கர் நகரை சார்ந்த அப்துல் ஜப்பார் திமுகவின் தீவிர பற்றாளரான இவர் 2வது வார்டில் துணை செயலாளராகவும் உள்ளார்
இவர் சார்ந்துள்ள பகுதியில் சாலை,வடிகால் வசதிகள் எதுவும் இல்லை என்றும் தாம் வசிக்கும் பகுதிக்கு வடிகால் சாலை வசதி கேட்டு பலமுறை புகார் அளித்தும் பலனில்லை என்கிறார்.
மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பூசலால் எங்கள் பகுதியை தொடர் புறக்கணிப்பு செய்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கிறார்.
நிலுவை இன்றி வரிகட்டும் எங்களை மாற்றாந்தாய் பிள்ளையாக நகராட்சி அதிகாரிகள் பார்க்கிறார்கள் என்றும், இந்நிலை தொடர்ந்தால் எங்கள் பகுதிமக்களை ஒன்று திரட்டி ஜனநாயக வழியில் தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் என கூறுகிறார்.