Home » அதிரையில் மாடுவினால் மடிந்த உயிர் ! இரண்டு நாள் அவகாசம் வழங்கிய நகராட்சி !

அதிரையில் மாடுவினால் மடிந்த உயிர் ! இரண்டு நாள் அவகாசம் வழங்கிய நகராட்சி !

by Admin
0 comment

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜமால் வயது 52, இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மதுக்கூரில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார் தினமும் அதிராம்பட்டினம் வந்து செல்வது வழக்கம்.

நேற்றிரவு அதிராம்பட்டினம் வந்த ஜமால் வண்டிப்பேட்டை அருகே சடலமாக கிடந்துள்ளார் இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் தகவலின் பேரில் விரைந்து வந்த போலிசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அவசர ஊர்தி மூலம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து குடும்பத்தினர்,போலிசிடம் புகார் அளித்துள்ளனர் இவரது இருசக்கர வாகனம் மாட்டின் மீது மோதியதற்கான சாத்திய கூறுகள் தென்படுகின்றன என்கின்றனர்.

விழித்துகொண்ட நகராட்சி !
வீதிகளில் விடப்பட்டுள்ள மாடு ஆடு நாய்களால் அவ்வப்போது விபத்து நடந்து வருகிறது என்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் எவ்வளவோ எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை நகரெங்கும் விளம்பர வாகனம் ஒன்று சுற்றி வருகிறது, அதில் மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்போர் அதனை வீதிகளில் உலவ விடக்கூடாது என்றும், மீறுவோரின் கால்நடைகளை பிடித்து அதிகப்படியான அபராதம் விதிக்கப்படு எனவும் இதற்கான அவகாசம் இரண்டு நாள் மட்டுமே என நகராட்சி ஆணையர் அவர்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter